Best Quotes of Mother Love Amazing collections in Tamil

Best Quotes of Mother Love Amazing collections in Tamil

சிரிப்பு மழையாக மழலை
அன்புடன் குடையாக தாய்..

உதிரம்விட்டு என் உயிர் கொடுத்த அன்னையே!
உறங்காமல் எனக்கு உணவை கொடுத்தவள்!
என் உணர்வில் கலந்து
என் ஊன்று கோலாய் இருப்பவளே!
நீ எனக்கு தெய்வம் அல்லவா..

ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறை இல்லை அது
அம்மாவின் சமையலறை..

இன்பமோ துன்பமோ
என எதை கண்டாலும்
தன் அருகில் வைத்து
இருக்க பிடித்து கொள்கிறது
அவளின் அன்பு..

ஆயிரம் உறவுகள் உன்னை
சுற்றி இருந்தாலும் அன்னையின்
உறவுக்கு ஈடாகுமா..!

அன்னை என்ற உறவே ஆயிரம்
உறவுக்கு அர்த்தம் தரும்..!

பல உறவுகள் பற்றி எனக்கு தெளிவாக
கூறியவள் அம்மா..!
ஆனால் அவள் யார் என்ற உணர்வு
என் கருவறையில் தெரிந்துகொண்டேன்..

வானத்தின் நிலவு பார்த்து நான் உணவு
உண்ணவில்லை அம்மா..!
அதை பற்றி நீ கூறிய அழகான வார்த்தைகளே..

அம்மா என்ற உறவு இல்லாதவர்களுக்கு
மட்டுமே தெரியும்..
அம்மா என்ற உறவின் அர்த்தம்..

வலி தரும் என்று தெரிந்ததுமே
அதனை தேடுவது தாய்மை..

You may also like...

Leave a Reply

Your email address will not be published.