Mother Quotes In Tamil

Mother Quotes In Tamil

நான் பார்த்த முதல் தேவதை என் அம்மா மட்டுமே…

நாம் கொண்ட அன்பு
இந்த உலகத்தை பெரியது அம்மா..

உந்தன் கருவறை குடுத்த அமைதி..
நான் என்றுமே காணாத அமைதி..

நான் வந்ததே சொர்க்கத்தில் இருந்து
தான் அம்மா… அது உன் கருவறை தான்..

பத்து மாதம் வயிற்றிலும்
உன் உயிர் உள்ள வரை உன் நெஞ்சிலும்
என்னை சுமக்கிறாயே..
அம்மா ஒரு அற்புதம் தான்..

வாழும் நாளில் உன்னுடன் ஆயிரம் சண்டைகள் போட்டாலும் உன்னை விட்டு எங்கு செல்வேன் அம்மா….

என் முதல் விளையாட்டே உன்னை உதைத்து தான் கற்றுக்கொண்டேன்.. அம்மா…

இதை உலகில் எங்கு உணவு உண்டாலும்
உன் சமையலுக்கு ஈடாகுமா…

என் கையால் சாப்பிட உணவு நான் வாழ்வதற்காக தான்…
உன் கையால் சாப்பிட உணவு நான் இருக்கும் வரை நினைவிருக்கும்.. என் அன்னையே…

என்னை பெற்றெடுக்கும் வலியும் நான் பிறந்தேன் என்ற சந்தோஷமும்.. இரண்டுமே
சந்திக்கும் தெய்வம் அம்மா…

உனக்குள் என்னை வைத்து
ரத்தத்தை பாலாக்கி
நான் தூங்க
நீ உன் தூக்கத்தை தொலைத்து
உன்னையே மறைத்து என்னை
பார்த்தாய்….

Leave a Reply