Amazing Quotes and message for Love in Tamil

Amazing Quotes and message for Love in Tamil

உலகிலேயே அதிகம் உள்ள ஒரே இனம் என்றால் அது காதலர் இனமே.. இது அனைவரும் அறிந்ததே. காதல் ஒரு அற்புதமான உணர்வு. காதல் எதிர்ப்பு பல இடங்களில் இருக்கிறது. இருந்தும் காதல் அழியாத ஒன்றாக தான் இருந்து வருகிறது. இதில் காதல் கவிதைகள் சில இருக்கின்றன.

பலரது வார்த்தைகள்
கூட பேச முடியாதவற்றை
சிலரது ஓரப் பார்வை
பேசி விடும்.

சின்ன சின்ன சண்டைகள்
காதலின் வெளிப்பாடு தான்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் பறந்துவிடும்.

உன்ன எவ்ளோ மிஸ்
பண்றனு எனக்கு
மட்டும் தான் தெரியும்..

I miss you

தோல்வியே தெரியாத என்
பிடிவாதம் கூட தோற்று போகிறது
உன் அன்பின் முன்னே.

மரணமில்லா உயிர்
கேட்பேன் உன்
தோள்சாய்ந்து வாழும்
வரம் கிடைத்தால்..!!

நீ என்னுடன் இருந்தால்
இருட்டிலும் நான் பௌர்ணமியே..

நீரில் இருந்தாலும் நெருப்பில் இருந்தாலும்
தங்கம் நிறம் மாறாது அது போல அருகில்
இருந்தாலும் தொலைவில் இருந்தாலும்
என்றும் என் காதல் மாறாது..

கவிதை எழுத தெரியவில்லை
உன்னை காணும் வரை..
உன்னை பார்த்த பின்பு
எழுதவே தெரியவில்லை..
ஆனால்
என் மனதில் ஓடுகிறது பல கவிதைகள்

உன்கூட
இருந்தா
ஒவொரு நிமிஷமும்
என்னால மறக்க
முடியாது

பல வருடம் ஆகலாம்
ஆனாலும் உன் கையும் என் கையும்
பிடித்து இருங்க வேண்டும்.. என்றென்றும்.

நீ எனக்கு தான்
நான் உனக்கு தான்.

உன் அன்பு விளக்கில் இருக்கும்
எண்ணையை போல..
அது குறையாதவரை என்று
சுடராய் எரிந்து கொண்டே இருப்பேன் அன்பே.

உறவு என்னவென்று
தெரியாமலேயே
அவனை உயிருக்குயிராய்
காதலிக்கிறேன்.

உன்னை மட்டுமே பிடித்த எனக்கு
உனக்கு பிடித்தது மட்டுமே என் நினைவில்
இருக்கிறது..

தினம் தினம்
சண்டை போடுவேன்..
சில நொடிகள்
கோபமாய் பேசுவேன்..
ஆனால் உனக்கொரு
வலி என்றால்
முதலில் கலங்குவது
என் விழி தானே..

உன்னை பதுக்கி வைத்துள்ள
என் இதயமும் ஒரு சுரங்கமாக மாறியதடி.

உன்
இதயமாக நான்
வாழ்கிறேன்
உனக்காகத்தான்
நான் துடிக்கிறேன்.

நீ அருகில் இருந்தால் உன்னுடன்
பயணம் செய்வேன்
நீ அருகில் இல்லாமல் போனால்
உன் நினைவுகளுடன் பயணம் செய்கிறேன்..

காலங்கள் காத்திருப்பது
இல்லை ஆனால் நம்மை
நேசிக்கும் உண்மையான
இதயங்கள் காத்திருக்கும்
எப்போதுமே.

உன் பார்வையில் இருந்து
விடுவிக்க நினைத்தாலும் உன்
சிறை பிடிக்கிறது என்னை
மீண்டும் மீண்டும்..

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.