Best Mother Quotes Collections In Tamil

Best Mother Quotes Collections In Tamil

மறுபிறவி இருந்தால்..
உனக்கு செருப்பாக பிறக்க வேண்டும் அம்மா..
என் அம்மா காலில் மிதிபட்டு அல்ல..
என்னை சுமந்த அவர்களை ஒரு முறையாது
நான் சுமக்க..

இறந்தும் பெற்ற பிள்ளைகளை
நினைக்கும் இதயம்
தாயிடம் மட்டுமே உள்ளது..

என் முகம் பார்க்கும் முன்பே,
என் குரல் கேட்கும் முன்பே,
என் குணம் அறியும் முன்பே,
என்னை நேசித்த ஓர் இதயம்..

என்ன தான் பஞ்சு மெத்தையில்
உறங்கினாலும் தாயின் மடியில்
உறங்கும் போது உணரும் பாதுகாப்பிற்கு
எதுவும் ஈடாகாதே..!!

மூன்றெழுத்துக் கவிதை
சொல்ல சொன்னால் முதலில் அம்மா
என்று மட்டுமே சொல்வேன்..
அவளே எனக்கு தெரிந்த அழகிய கவிதை..

இவளருகில் தோள் சாயும் போது
துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம்
இவள் மடியில் துயிலுறங்கும் போது
இதயத்தில் இன்பத்தின் அருவியும்
கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும்
நம்மை தினம்தினம் சுமக்கும்..
ஒரே ஜீவன் என் அன்னை..

வலி தந்தவர்களை உயிரை நினைப்பது
தாயின் அன்பு மட்டுமே..

காலங்கள் மாறினாலும்
மாறாது அவளின் மனம்
மரணம் வந்தாலும்
நேசிப்பதே அவளின்
குணம்..
அம்மா….

அன்பு அக்கறை
அரவணைப்பு, பாசம்,
நேசம், தியாகம், என எல்லா
உணர்வுகளையும் ஒரே
இடத்தில பெற முடிந்தால்
அதுதான் உண்மையான
வாழும் கடவுள்
..அம்மா..

எத்தனை பிறவி எடுத்தாலும்
நாம் தங்கியதற்கு
வாடகை செலுத்த முடியாத இடம்,

தாயின் கருவறை…

வார்த்தைகளே இல்லாத
வடிவம்
அளவுகோலே இல்லாத
அன்பு
சுயநலமே இல்லாத
இதயம்
வெறுப்பை காட்டாத
முகம் ..
அம்மா

You may also like...

Leave a Reply

Your email address will not be published.